search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோ பூஜை"

    • ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும்.
    • ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது பெருமை வாய்ந்தது.

    ஒரு வருடத்திற்கு 24 ஏகாதசிகள் வரும். அவை ஒவ்வொன்றுமே ஒரு சிறப்பை பெற்றிருக்கின்றன. அந்த வகையில் ஆடி மாதத்தில் வரும் வளர்பிறை ஏகாதசியானது, பெருமை வாய்ந்தது. இந்த ஏகாதசியை 'சயினி ஏகாதசி' என்பார்கள்.

    'பத்ம ஏகாதசி', 'தேவபோதி ஏகாதசி', 'விஷ்ணு சயன ஏகாதசி', 'தாயினி ஏகாதசி' என்று பல பெயர்களில் அழைக்கப்படுகிறது.

    விஷ்ணு பகவான் தன்னுடைய உலக கடமைகளை நிறைவேற்றிய பிறகு, பாற்கடலில் ஆதிசேஷன் மீது சயனித்து நான்கு மாதங்கள் தியானத்தில் ஆழ்ந்த தினம் இது வாகும். அந்த நான்கு மாதங்களும் 'சதுர்மாஸ்' என்று அழைக்கப்படுகின்றன.

    ஆடி மாதம் என்பது பொதுவாகவே சிறப்புக்குரிய மாதமாகும். அதோடு மகாவிஷ்ணுவின் அருள் நிறைந்த சந்திரனும், சூரியனும் ஒரே ராசியில் சஞ்சரிக்கும் சிறப்பைப் பெற்ற மாதமாகவும் இது திகழ்கிறது.

    இந்த நாளில் 'கோ பத்ம விரதம்' இருப்பது மிகவும் விசேஷமானது. கோ என்னும் பசு வழிபாடு புராணங்களில் மிகச் சிறப்புக்குரியதாக சொல்லப்பட்டிருக்கிறது.

    பாற்கடலைக் கடைந்த போது, அதில் இருந்து பல்வேறு பொருட்களும், உயிரினங்களும், தேவர்களும் வெளிப்பட்டனர். அவற்றில் கேட்டதை கொடுக்கும் 'காமதேனு' பசுவும் அடங்கும். இந்த பசுவிற்கு பட்டி, விமலி, சயனி, நந்தினி, கொண்டி என்ற ஐந்து குட்டிகள் பிறந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

    சிவபெருமான், நான்கு பசுக்களை நான்கு திசை தெய்வங்களுக்கு வழங்கியதாக சிவபுராணம் கூறுகிறது.

    அதன்படி இந்திரனுக்கு 'சுசிலை' என்ற பசுவும், எமனுக்கு 'கபிலை' என்ற பசுவும், வருணனுக்கு 'ரோகிணி' என்ற பசுவும், குபேரனுக்கு 'காமதேனு' என்ற பசுவும் வழங்கப்பட்டுள்ளது. பசுவின் உடலில் முப்பத்து முக்கோடி தேவர்களும் வாசம் செய்து அருள்புரிகின்றனர்.

    ஆடி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, 'கோ பத்ம விரத'த்தை கடைப்பிடிக்க வேண்டும். அன்றைய தினம் காலையில் எழுந்ததும் நீராடுவது அவசியம். பின்னர் பசு மாடு வைத்திருப்பவர்கள், அந்த பசுவை கட்டி வைத்திருக்கும் கொட்டிலில் (பசு கொட்டில் இல்லாதவர்கள், பூஜை அறையில் செய்யலாம்) பச்சரிசி மாவால், தாமரைப் பூ போன்று வரைந்து கோலம் போட்டு விட்டு, பின்னர் சிறிய சிறிய கோலங்களாக தாமரைப் பூ இதழ்களுடன் 33 கோலங்கள் போட வேண்டும்.

    இதனை பல வண்ணப் பொடிகளால் அலங்கரிக்கலாம். இந்த கோலங்களின் நடுவில் பெருமாளும், தாயாரும் இருக்கும் படத்தை வைக்க வேண்டும். லட்சுமி நாராயணர் படம் அல்லது விக்கிரகம் இருந்தால் அவற்றை வைக்கலாம். இல்லையெனில் கலசம் வைத்து பூஜிக்க வேண்டும்.

    பூஜை தொடங்கியதும், ஓம் கேசவா நமஹா, ஓம் நாராயணா நமஹா, ஓம் மாதவா நமஹா, ஓம் கோவிந்தா நமஹா, ஓம் விஷ்ணு நமஹா, ஓம் மதுசூதனா நமஹா, ஓம் திரிவிக்கிரமா நமஹா, ஓம் வாமனா நமஹா, ஓம் ஸ்ரீதரா நமஹா, ஓம் ஹ்ருஷிகேஷா நமஹா, ஓம் பத்மநாபா நமஹா, ஓம் தாமோதரா நமஹா என்ற 12 நாமங்களை சொல்லி இறைவனை ஆவாகனம் செய்ய வேண்டும்.

    பின்னர் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக சேர்ந்து 33 முறை இறைவனை சுற்றி வர வேண்டும். பூஜையில் வெற்றிலை, பாக்கு, தேங்காய் போன்றவற்றை வைத்து, 33 வெல்லத்தில் செய்த அப்பத்தை நைவேத்தியமாக படைக்க வேண்டும்.

    பூஜையின் முடிவில் அந்த நைவேத்திய பிரசாதத்தை 33 பேருக்கு பகிர்ந்து கொடுக்கலாம். இந்த விரதத்தை முறைப்படி கடைப்பிடிப்பவர்கள் அனைத்து பாவங்களில் இருந்தும் விடுபடுவார்கள். அவர்களுக்கு விஷ்ணு பகவானின் அருள் முழுமையாகக் கிடைக்கும்.

    இந்த நாளில் விஷ்ணு சகஸ்ர நாமத்தை பாராயணம் செய்வது மிகமிக சிறப்பானது. பசுவை முதலில் பூஜித்து விட்டு இந்த விரதத்தை ஆரம்பிக்க வேண்டும்.

    இந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் குடும்பத்தில் துன்பமான நிகழ்வுகள் நடக்காது. அதோடு மகாலட்சுமியின் அருள் கிடைக்கப்பெறும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருக்காது. அதிர்ஷ்டமான வாய்ப்புகள் தேடி வரும். மரண பயம் விலகும்.

    • செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.
    • அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    பல்லடம்:

    பல்லடம் காந்தி ரோட்டில் செல்வ விநாயகர், பாலதண்டபாணி கோவில் உள்ளது. சுமார் 200 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த கோவிலில் நீண்ட காலமாக கும்பாபிஷேகம் நடைபெறவில்லை.இந்தநிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செல்வ விநாயகர் கோவிலில் திருப்பணி செய்ய முடிவு செய்யப்பட்டு கோவில் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்டது.

    பின்னர் திருப்பணி செய்ய பாலாலய பூஜை நடைபெற்றது.இதை தொடர்ந்து சுவாமி சிலைகள் கோவிலில் இருந்து எடுக்கப்பட்டு, அருகே உள்ள பொன்காளியம்மன் கோவிலில், தனி அறையில் பாதுகாப்புடன் சுவாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே பக்தர்கள் வழிபடுவதற்காக அத்தி மரத்தால் செய்யப்பட்ட செல்வ விநாயகர், பாலதண்டபாணி, சுவாமி சிலைகள், கோவில் அருகே தற்காலிகமாக இரும்பு தகடுகள் மூலம் அறை அமைக்கப்பட்டு அங்கு சுவாமி சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கோவில் கட்டுவதற்கு முன் அங்கு பாசிப்பயிர், கம்பு, ராகி உள்ளிட்ட பயிர்களை வளர்த்து அதனை கால்நடைகளை விட்டு மேய விட வேண்டும் என்பது ஐதீகம். இதன்படி செல்வ விநாயகர் கோவிலில் கோ பூஜை நடைபெற்றது. அதன் பின்னர் கோவில் கட்டப்பட உள்ள இடத்தில் மாடுகள், மற்றும் குதிரை ஆகியவற்றை விளைந்த தானிய பயிர்களை மேய விட்டனர்.

    இதுகுறித்து திருப்பணி குழுவினர் கூறுகையில், செல்வ விநாயகர், பால தண்டபாணி திருக்கோவில் கட்டுவதற்காக அரசின் ஸ்தபதியிடம் கட்டுமான வரைபடம் கேட்டு விண்ணப்பித்துள்ளோம். கட்டுமான வரைபடம் வந்தவுடன் அதனை அரசின் ஒப்புதல் பெற்று விரைவில் திருப்பணிகள் துவங்கும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.நீண்ட காலமாக திருப்பணி நடைபெறாமல் இருந்த செல்வ விநாயகர், தண்டபாணி கோவிலில் தற்பொழுது திருப்பணிகள் நடைபெறுவது பல்லடம் மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    • கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.
    • ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது.

    பெருமாநல்லூர்:

    திருப்பூர் மாவட்ட கோ சேவா சமிதி சார்பில் மாதம் ஒரு இடத்தில் பாரம்பரியமான நாட்டுப் பசுக்களை வைத்து கோ பூஜை மிகவும் சிறப்பாக நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த மாதத்திற்கான கோ பூஜை இன்று 21ந்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருப்பூர் மங்கலம் ரோடு பெரியாண்டிபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவில் வளாகத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற உள்ளது.

    ஆடி வெள்ளியில் நடைபெறும் புனிதமான இந்த கோ பூஜையில் அனைவரும் குடும்பத்தோடு கலந்து கொண்டு கோமாதா அருளைப் பெற வேண்டும் என்று திருப்பூர் ஜில்லா கோ சேவா சமிதி விடுத்துள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பிறவிப் பிணி தீர்க்கும் கோ பூஜை... வழிபட்டால் தீரும் பிரச்சனைகள்
    • ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

    மாட்டுப்பொங்கல்/திருவள்ளுவர் தினம் 16.1.2023, தை 2 , (திங்கட்கிழமை)

    இந்து சமயத்தில் பசுவை வணங்குவதைப்பெரும் புண்ணியமாக கருதுகின்றனர். இந்தப் பசுவை கோமாதா என்றும் பெருமையுடன் அழைக்கின்றனர்.

    பசுவின் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் தெய்வங்களும், புனிதத்திற்குரியவர்களும் இருப்பதாக கருதுகின்றனர்.

    இப்பசுக்களில் மும்மூர்த்திகள் மட்டுமல்ல சத்தியம், தர்மம் என்று எல்லா தேவதைகளும் வசிக்கின்றனர். மாட்டுப்பொங்கல் அன்று கோமாதா எனப்படும் பசுவை பூஜை செய்து வழிபட்டால் பிறவிப் பிணி தீரும். ஜாதகத்தில் உள்ள அனைத்து விதமான தோஷங்களும் விலகும்.

    கடும் உழைப்புக்கும் உழவுக்குத் துணை செய்த கால்நடைகளை ஆராதிக்கும் நாள். உழவுக்கு உதவிய கால் நடைகளுக்கும் பால் தரும் பசுக்களுக்கு நன்றி தெரிவிக்கும் நாள் தான் மாட்டுப்பொங்கல். திங்கட்கிழமை அன்று காலை 9.00 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கால்நடைகளை சுத்தப்படுத்தி, கொம்புகளுக்கு வர்ணம் தீட்டி மாலைகள் அணிவித்து அலங்கரிக்க வேண்டும்.

    மாட்டுக் கொட்டகை சுத்தம் செய்து சர்க்கரை பொங்கல் படைத்து கோ பூஜை செய்வது சிறப்பு.மாடுகளை வணங்கி விட்டு வாழை இலையில் பொங்கல் வைத்து அவற்றிற்கு உண்ண கொடுக்க வேண்டும்.  தமிழக கிராமங்களில் உறவினர்கள் மேல்  மஞ்சள் நீர் தெளிப்பது , ஜல்லிக்கட்டு என்னும் மாடுபிடி விளையாட்டு இந்நாளில் நடைபெறும். இந்த நாளில் பசுவை பூஜித்தால் சகல தேவதைகளையும் பூஜித்த பலன் கிட்டும். 

    கோ பூஜை செய்தால் கோடி நன்மை பெறலாம் என்பது நமது முன்னோர் வாக்கு.தினமும் கோபூஜை செய்வது சிறப்பு. தினமும் செய்ய முடியாதவர்கள் வெள்ளிக்கிழமைகளில் செய்ய வேண்டும். அதுவும் முடியாதவர்கள்.சகல ஐஸ்வர்யத்தையும் அள்ளித்தரும் கோ பூஜையை வருடம் ஒருமுறையாவது மாட்டுப்பொங்கல் அன்று செய்து வரவேண்டும்.  

    வருடத்திற்கு ஒருமுறையாவது பசுவை வீட்டிற்கு அழைத்து அதற்கு மஞ்சள்,குங்குமம் வைத்து, மலர்களால் அலங்காரம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து  பழங்கள், அகத்திகீரை போன்றவற்றை தானியங்கள் சாப்பிட கொடுத்து, நெய் விளக்கு ஏற்றி, தீபஆராதனை செய்ய வேண்டும்.பிறகு நெய் விளக்கை கையில் எடுத்து அந்த பசுவை சுற்றி மூன்று முறை வலம் வர வேண்டும். இப்படி வருடத்திற்கு ஒருமுறையாவது கோபூஜை செய்து வந்தால், நம் இஷ்ட தெய்வ குல தெய்வ அருளாசியும் கிடைத்து, தலைமுறை தலைமுறைக்கு சுபிட்சம் கிடைக்கும்.உயர் ஜாதி பசுவை கன்றுடன் ஸ்ரீசுக்தம் சொல்லி கோபூஜை செய்து, தானம் செய்தால் கோர்ட் விவகாரங்கள், வழக்குகளில் வெற்றி ஏற்படும்.விரோதம் நீங்கும்.

    பிதுர் சாபம், ரிஷிகள் சாபம், மூதாதையர் சாபம் ஆகியவை நீங்குகிறது. செல்வவளம் தரும் திருமகள் இதன் பிருஷ்டபாகத்தில்(பின்பாகம்) வசிக்கிறாள். இப்பகுதியைதொட்டு வழிபட்டால் முன் ஜென்ம பாவங்கள் விலகும். இந்திர பூஜையை விட கோ பூஜையே மேலானது என்று ஸ்ரீ கிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.

    • கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது.
    • பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம்.

    திருப்பதி அலிபிரி அருகே பக்தர்கள் நடைபாதையாக திருமலைக்கு செல்லும் இடத்தில் 5 ஏக்கர் நிலப்பரப்பில் கோசலை அமைக்கப்பட்டு கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி, ஏகாதசி அன்று திறக்கப்பட்டது.

    கோ சாலையில் ஓங்கோல், அல்லி காரு, கிர், ஹாசிவாதா, காங்கேயன், காங்கேஜ், ராயிடி என 7 வகையான பசுக்கள் உள்ளன.

    கோ சாலையில் தினம் தோறும் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை கோ பூஜை நடைபெறுகிறது. வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் காலை 7-30 மணி முதல் 9-30 மணி வரை கிருஷ்ணருக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. கோ பூஜையில் கலந்து கொண்டால் வீட்டில் சுபிட்சம் உண்டாகும்.

    தோஷங்கள் நீங்கும். மேலும் பித்ரு தோஷம், பிரம்ம தோஷம் ஆகியவை நீங்கும் என்பது ஐதீகம். பூஜையில் கலந்து கொள்ள ரூ.300 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

    ஏழுமலையானை தரிசனம் செய்ய செல்லும் பக்தர்கள் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர். தினமும் கோ பூஜையில் கலந்து கொள்கின்றனர்.

    மேலும் அங்குள்ள பசுக்களுக்கு துலாபாரம் மூலம் எடைக்கு எடையாக புல் வழங்கி வருகின்றனர்.

    பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. ‘கோ’ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும்.
    விலங்குகளுக்கு சக்தி அதிகம். கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில் பசுக்களை வளர்ப்பது நல்லது. அவற்றுக்கு ‘கோ’ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும்.

    கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள். மணிவிழா நடைபெறும் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்யப்படும்.

    பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது. முன்பு அரசர்களின் ஊர்வலங்களில், பசுதான் முதலில் செல்லும். அதிகாலையில் பசுவை தரிசனம் செய்தால், எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

    பசு வழங்கும் ஐந்து பொருட்கள்:- பால், தயிர், வெண்ணெய், கோமியம், சாணம் ஆகும். இந்த ஐந்தும் கலந்த கலவையே சக்தி பெற்ற ‘பஞ்சகவ்யம்’ என்று அழைக்கப் படுகிறது. சிரவண சடங்குகளில் பஞ்சகவ்யம் கொடுக்கப்படும். வீட்டில் குழந்தை பிறந்தால் அந்த இடத்தில் பஞ்சகவ்யம் தெளிக்கப்படும்.

    கர்ப்பம் தரித்த பெண்கள் 3-ம் மாதத்தில் இருந்து பஞ்சகவ்யம் சாப்பிடுவார்கள். புதிதாக வாங்கும் ஆடைகளை பசுவின் முதுகில் வைத்து வழிபட்டு விட்டு, பிறகு அணிந்து கொண்டால் நற்பலன்கள் கிடைக்கும். நோயுற்ற குழந்தைகளின் முகத்திற்கு எதிரே, பசுவின் வாலை 3 முறை சுற்றிக் காட்டினால் நோய் குணமாகும் என்பது நம்பிக்கை. பசு பால் வழங்குவதில் இருந்து 11-வது நாள் வரும் பாலை, அனைவருக்கும் இலவசமாக வழங்கினால், அந்தக் குடும்பத்தின் எதிர்காலம் சிறப்பாக அமையும்.
    பசுவை துன்புறுத்தி அதன் இறப்புக்கு காரணமாக இருந்தால் கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது. இந்த தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் உள்ளது.
    பசுவுக்கு உணவிடாமல் இருப்பது, அடிப்பது, பசுவின் இறப்புக்கு காரணமாக இருப்பது ஆகியவற்றால் ஒருவருக்கு கோஹத்தி தோஷம் உண்டாகும் என சாஸ்திரம் கூறுகிறது.

    இதனால் பாவத்தை செய்தவர் மட்டுமல்லாமல் அவரது சந்ததியும் தொடந்து பாதிக்கும். இதற்கு பிராயச்சித்தமான மஹார்வணம் என்னும் நூலில் ஒரு பரிகாரம் கூறப்பட்டுள்ளது.

    பசு ஒன்றை வாங்கி ஒரு மாதம் வரை வீட்டில் வைத்து தினமும் பசுவுக்கு நன்கு உணவளித்து பராமரிக்க வேண்டும். அதை சுதந்திரமாக நடக்க விட வேண்டும். காலையிலும், மாலையிலும் அந்த பசுவை மூன்று முறை வலம் வந்து வணங்கி கோ பூஜை செய்ய வேண்டும். ஒரு மாதம் கழித்த பின்னர் பசுவை தானம் அளித்து விட வேண்டும். இதனால் பசு தோஷம் நீங்கும். துன்பங்களும் படிப்படியாக குறையும்.

    கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும்.
    மனித வாழ்க்கையில் தாய்க்கு இணையான ஒரே உயிரினம் பசு. குழந்தைப் பருவத்தில் நமது வாயால் அம்மா என்று சொல்லும் முன் பலப்பல குழந்தைகளின் காதில் பசு எழுப்பும் அம்மா என்ற அந்த அமுதக் குரல் காதுகளை நிரப்பி இருக்கும்.

    * கோமாதா என்று போற்றப்படும் பசுவிற்கு அகத்திக் கீரை தருவதால், முதலில் அறியாமல் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிவிடும். பெரும் தவறுகளால் உண்டாகும் பிரம்மஹத்தி தோஷங்கள் விலகிவிடும்.

    * முன்னோருக்கு செய்ய வேண்டிய நீத்தார் கடன்களான திதி , கர்மா செய்யாமல் இருந்தால் ஏற்படும் பாவம் பதினாறு அகத்தி கீரை கட்டை பசுவுக்கு தருவதால் நீங்கும். மேலும் பித்ரு தோஷங்களும் நீங்கும்.

    * பசுவை ஒரு முறை பிரதட்சணம் செய்வதால் பூலோகம் முழுவதும் பிரதட்சணம் செய்த புண்ணியம் கிடைக்கும்.

    * கோமாதாவை சிரத்தையுடன் வணங்கிட பிரம்மா, விஷ்ணு, முதலான அனைத்து தெய்வங்களையும் பூஜித்த புண்ணியம் நமக்கு கிடைக்கும்.

    * உண்பதற்கு பசுவிற்கு புல் கொடுத்தாலும் ( கோக்ராஸம்), பசுவின் கழுத்து பகுதியில் சொரிந்து கொடுத்தாலும் (கோகண்டுயனம்) நம்மை பிடித்த தீராத பாவங்கள் விலகும்.

    * பசுக்கள் மேய்ந்து விட்டு வீடு திரும்பும் சந்தியா காலம் கோதூளி காலம் (லக்னம்) என்று அழைக்கப்படுகிறது. இது மிக புண்ணியமான காலமாகும்.

    * பசு நடக்கும் போது எழும் புழுதியானது நம் உடலில் படுவது 8 வகை புண்ணிய ஸ்நானங்களில் ஒன்றாகும். பசுவின் கால் பட்ட தூசியைதான் மாமன்னர்கள் பூசிக்கொண்டார்கள்.

    * " மா " என்று பசு கத்தும் ஓசை அப்பகுதிக்கு மங்கலத்தை தருகிறது. பசு வசிக்கும் இடத்தில், அதன் அருகில் அமர்ந்து சொல்லும் மந்திர ஜபமோ, தர்ம காரியங்களோ நூறு மடங்கு பலன்களை அள்ளித் தரும்.

    * மனிதன் கண்களுக்கு புலப்படாத ம்ரத்யு, எமன், எம தூதர்கள் பசுவின் கண்களுக்கு மட்டுமே புலப்படுவார்கள்.

    * ஒருவர் இறந்த பின் பூலோகத்தில் இருந்து அழைத்து செல்லப்படும் ஜீவன் அஸிபத்ர வனத்தில் வைதரணிய நதியை (மலம் , சலம் , சளி, சுடு நீர் ஓடும் நதி) கடக்க இயலாமல் தவிக்கிறது. பசு தானம் செய்பவர்களுக்கு இந்த துன்பம் நிச்சயம் ஏற்படாது. அவரால் தானம் செய்த பசுமாடு அங்கு தோன்றி அதன் வாலைப் பிடித்துக்கொண்டு வைதரணிய நதியை கடந்து விட உதவுகிறது என்கிறது கருட புராணம்.

    * கோமாதா நம் குலம் காக்கும் தெய்வம். கோமாதவை வழிபட நம் குலம் செழிக்கும். வாழ்வு வளம் பெருகும்.
    கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். கோடி புண்ணியம் கிடைக்கும்.











    கலங்கும் உள்ளத்தைக் காப்பதற்கு விலங்குகள் பெரிதும் உதவுகின்றன. பசு ஒரு சக்தி வாய்ந்த விலங்கு. வீடுகளில் பசுக்களை வளர்ப்பது நல்லது.

    கோ பூஜை செய்வதன் மூலம் ஆபத்துக்கள் அகலும். பாவம் தீரும். செல்வம் செழிக்கும். கிரகப் பிரவேசத்தில் கோ பூஜை செய்வார்கள்.

    அதேபோல் மணிவிழாவின் போதும், கணபதி ஹோமம் செய்யும் பொழுதும் கோ பூஜை செய்வார்கள். பசு நுழைந்த வீட்டில் தீய சக்திகள் அண்டாது.

    முன்பு அரசர்களின் ஊர்வலங்களில் பசு முதலில் செல்லும். அதிகாலையில் பசுவைத் தரிசித்தால் எல்லா தீர்த்தங்களிலும் நீராடிய பலன் கிடைக்கும்.
    நெல்லை எட்டெழுத்து பெருமாள் கோவிலில் கோபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு கோ பூஜை செய்தார்.
    தாமிரபரணி மகா புஷ்கர விழா வருகிற 11-ந்தேதி தொடங்கி 22-ந்தேதி வரை தாமிரபரணி ஆற்றில் உள்ள படித்துறைகளில் நடக்கிறது. நெல்லை அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை சார்பில் தாமிரபரணி மகா புஷ்கர விழா நடத்தப்படுகிறது.

    இந்த புஷ்கர விழா எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் வருகிற 9-ந்தேதி காலை 6 மணிக்கு தசமஹா வித்யா யாகம், கணபதி ஹோமத்துடன் தொடங்குகிறது.

    இதைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடியேற்றம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம், லட்சுமி ஹோமம், வாஸ்து ஹோமம் நடக்கிறது. 10-ந்தேதி காலையில் மகாகாளி யாகம் நடக்கிறது. 11-ந்தேதி காலை 6 மணிக்கு சுவாமி தீர்த்தவாரி, 9 மணிக்கு யாகசாலை பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் கலந்து கொண்டு, மகா ஆரத்தியை எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு படித்துறையில் தொடங்கி வைக்கிறார்.

    12-ந்தேதி காலையில் ராஜமாதங்கி யாகம், 13-ந்தேதி காலையில் திரிபுர பைரவி யாகம், மாலையில் வைணவ திருவிழா, 14-ந்தேதி காலையில் சின்னமஸ்தா யாகம், மாலையில் வைணவ திருவிழா, 15-ந்தேதி காலையில் ஷோடச யாகம், மாலையில் வைணவ திருவிழா நடக்கிறது. 16-ந்தேதி காலையில் தூமாவதி யாகம் நடக்கிறது.

    17-ந்தேதி காலையில் பகளாமுகி யாகம், 18-ந்தேதி காலையில் கமலாத்மிகா யாகம், 19-ந்தேதி காலையில் புவனேசுவரி யாகம், 20-ந்தேதி காலையில் வராகி யாகம், 21-ந்தேதி காலையில் பிரத்திரிங்காரா யாகம், 22-ந்தேதி காலையில் மகா சண்டியாகம் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 5 மணிக்கு சுவாமிக்கு தீர்த்தவாரி, கோபூஜையும், மாலை 4 மணிக்கு ஆரத்தியும் நடக்கிறது.

    இதையொட்டி எட்டெழுத்து பெருமாள் கோவில் கோசாலை ஜடாயு துறையில், சிதிலமடைந்த படித்துறைகளை அகற்றிவிட்டு அங்கு புதிதாக கருங்கல்லால் படித்துறை அமைக்கப்பட்டு வருகிறது. 
    ×